Posts

உதிரத்தில் உயிர்த்த விதை!

Image
காற்று வெளியிடை கண்ணம்மா... என் கண்கள் வழிந்ததடி.. பிறந்த நாளின்று... மறந்த நீ என்னை.. இறந்து கண்டேனே! விரகத்தில் நான் விதைத்த விதைகள் எல்லாம்...... உன் கண்ணொளி காணாததால்.... மண்ணுக்குள் மடியுதடி! உன் நெஞ்சுக்குள் இனினும் ஈரம் சுரக்காதெனில்..... நரகத்தின் வாசலில் நிச்சயம் உன்னை நிறுத்துமடி ! கண்ணம்மா என் கண்கள் கலங்குதடி! கோ கோ

வாடியம்மா!

Image
ஓர் நொடியேனும்.. உடனே செத்து... உன்  விழிபார்த்து.. கரம் கோர்த்து.. மொழி கேட்டு... என் வழி கண்டு - அவள் வலி வெல்ல.. நெஞ்சம் வேண்டுதம்மா! கொஞ்சம் வாடியம்மா! கோ கோ

இருப்பின் கனம்!

வழி தொலைந்த பாலைவனத்தில்.. நா வற்ற.. நாளம் வற்ற.. முற்றும் போகும் ஒற்றை நொடி முன் கண்ணில் படும் கானல் குளம்.. உயிர்- இருப்பின் கனம்! உள்ளம் கலந்தவள்.. உயிரைக் கடந்தவள்.. கவிஞன் அவனென்று காதலும் துறந்தவள்.. கண்டவன் கைகோர்த்து குண்டமும் எரிக்கையில்... வெந்திடும் விறகோடு அவன் விரகமுமே! காதல் - இருப்பின் கனம் ! சிறுவயதில்.. இடுப்பை விட்டு இறங்காத மகன்.. பெருவயதில்.. இடுப்பை உடைத்து மூலையில் வீச.. விம்மிய தாயின் வழிந்த கண்ணில்... கருணை- இருப்பின் கனம்! கோ கோ

நான் தொலைத்த வெள்ளையன்!

பக்கத்துக்கு வீட்டுப் பாப்பாத்தி.. படபடத்து சத்தம் போட.. அலறி அடிச்சு அம்மாவும் நானும் ஓட... எடுத்து விசுறுனா ஒரு மரப்பெட்டி.. எட்டிப்பாத்தா 6-7 பூனைக்குட்டி! ஒளிஞ்சு பாத்த அம்மா.. ஒருநிமிசம் ஓயாம .. ஒவ்வொண்ணா கவிகிட்டு மரப்போருக்கு ஓட.. எனக்குப் புடிச்ச வெள்ளகுட்டியோட.. விசுக்குனு வீடு வந்துட்டேன்! அட்டைபெட்டி வீடொன்னும்.. அரலிட்டர் பாலென்னும்...ஆசையா வளந்த வெள்ளையன்.. அசைவத்துக்கு ஆசைப்பட்டு...பெருச்சளியை கவ்வுனதும்.. அம்மா அதட்ட..மனசே இல்லாம.. தூரத்து குட்டையில கொண்டுபோய் விட்டுபுட்டு! வீடு வந்து சேர்ந்தேன் அனாதையாக! அப்ப அப்ப... பாப்பாத்தி சத்தம் போட்டா.. வெள்ளையன் வந்து போவான்.. யாருக்கும் தெரியாம- என் நெஞ்சுக்குள்ள! கோ. கோ 

பைத்தியக்காரன்!

எரித்த பூவை கையில் வைத்துக்கொண்டு .. என் இதயத்தைக் கேட்கிறேன் ... என்னவள் எங்கே ? நானே வெறுத்தாலும் .. என்னை பொறுத்து - ஆளும் ! என்று சொன்ன என்னவள் எங்கே ? உலகமே உம்மை எதிர்த்தாலும் .. உம் திலகமாய் .. உடனிருந்து கரம் பிடிப்பேன் ! என்று சொன்னவள் எங்கே ? மதி இழந்து .. பிழை செய்து .. விழி பிதுங்கி வீழும் முன் . என் விரல் கொடுத்து மீட்பேன் .. என குரல் கொடுத்தவள் எங்கே ? என்னைப் பெற்றவளை ... எனக்குப் பெற்றுத்தருவேன் ... என பாடம் சொன்ன என்னவள் எங்கே ? எறிந்த பூவின் எச்சம் .. என் இதயத்தை பொசுக்கும் நேரம் ! உன் முழியான் கண் வழி வழியும் துளி ஒன்றும் ! குழந்தை குறுநகை ஒன்றும் ! கொண்டு வா ! நம் அன்பின் ஆழி ! எதுவென .. அகிலம் உணரட்டும் ! …………… முள்ளை முத்தமிட்டு .. முல்லை என்ன சொல்லிக்கொண்டேன் ! பைத்தியக்காரன் ! கோ கோ

கொப்பளிக்கும் குருதி!

அக்கினியால் சுட்டாலும் ... அகண்ட வாய் கொண்டென்னை ஏசினாலும் ... குருதி வழிய குடைந்து தீர்த்தலும் ! மனமறுத்து மயங்க மாட்டேன் ! மதி இழந்து வருந்த மாட்டேன் ! மாறாய் சினம் அடக்கி வரம் செய்வேன் !- சாகமாட்டேன் ! பொய்த்திரை பூண்டு .. புகழ் எய்தும் புத்தி - கொடுக்கவில்லை என் தாயும் ! அன்பை அறுத்து ... பண்பை வளர்க்கும் பாடம் - படிக்கவில்லை நானும் ! சூழ்ச்சிகளில் சிக்கி சூட்சுமங்கள் கற்று .. சுயம்புவாய் சுடர்கின்றேன் ! சூழ்நிலைகள் என்னை சூனியமாக்கலாம் ! சுற்றங்கள் என்மீது குற்றங்கள் சுமத்தலாம் ! கணுக்கால் நரம்பறுத்து என் கனவுகளைக் கட்டலாம் ! கவலை இல்லை ! என் ஆத்மம் ஒன்றே ! அப்புழுக்கற்ற அன்பு ! அறிந்தவர்களுக்கும் - அறைந்தவர்கர்களுக்கும் ! சம அளவு அன்பே ! வாழ்க்கை ! புரியாமல் - தெரியாமல் இருந்து விட்டால் சுகம் ! புரிந்தும் - தெரிந்தும் இருந்து விட்டால் .... நீ பிழையே ! ( அன்பே சிவமும் ! அன்பே சக்தியும் ! அன்பே ஹரியும் ! அன்பே பிரம்மமும் ! அன்பே தெய்வமும் ! அன்பே மனிதரும் !

அவளும் நானும்!

அடடா... எத்துணை அழகு! அவளுக்கு கூட கிடையாது.. இதனை மச்சங்கள்! கருப்பு உடலில்.. வெள்ளை வெள்ளையாய்! கொள்ளை கொள்ளையாய்! அது என்ன ? ஒன்றுமட்டும்.. ஒரு விதமாய்- பதமாய்.. ஒவ்வொருநாளும் உருமாறுகிறதே! முக்கால் வளர்ந்த பாகத்தை நாளை.. நன் முழுதாய் காணலாமா? காலமே பதில் சொல்லையா! சூரியனே! சீக்கிரம் வடக்கு நோக்கி விரைந்து போ! அடக்கமாய் உறங்கும் கருப்பையை இங்கு கடத்தி வா! வட்டழகுக் கன்னி.. இன்று எனக்குத்தான்! வந்துவிட்டாயா! மாமனைக்கான.. மஞ்சள் புசிக்குளித்து.. மங்கலமாய் வந்தாயோ? கருப்பு வண்ண சேலையை.. அங்கமெல்லாம் சுற்றியும்... உன் அழகெல்லாம் அப்படியே தெரியும்.. மாயமென்ன? கன்னம் சிவக்கதே.. இங்கு எவரும் விழித்திருக்கவில்லை! விடியும் வரை.. விருந்துண்ண இருப்பது.. என் விழிகள் மட்டுமே! முகிலிழுத்து.. முலைகள் மூடாதே.. மாமன் உடனிருக்க.. எதுவும் நினையாதே! தொட்டுவிடத்தான்.. நெடுங்கலாம் முயற்சிக்கிறேன்.. தொடபாடில்லை! உன்னை கட்டியணைக்கத்தான்.. காற்றிலே பறக்கிறேன்... அடைந்தபாடில்லை! நெருங்க நெருங்க.. விலகிச்செல்கிறாய்! நெஞ்சம்.. நொறுங்க நொறுங்க..